மருந்தாளுனர் சங்கத் தலைவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.
தேசிய மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை அதிகாரசபையின் இரகசிய தகவல்கள் வெளியாட்களுக்கு வழங்கப்படவதாக சந்தேகித்த மருந்தாளுநர்கள் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவவை டிசம்பர் 2ஆம் திகதி முதல் கட்டாய விடுமுறையில் இருக்க அதிகாரசபையின் தலைவர் டாக்டர் ஆனந்த விஜேவிக்ரம ஏற்பாடு செய்துள்ளார். .
கொழும்பில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்திய நிபுணர்களின் கூட்டுப் பேரவையின் தலைவர் ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, ரணதேவவின் தனிப்பட்ட கையடக்கத் தொலைபேசியை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பெற்றுள்ளது.
இது குறித்து உடனடி விசாரணை நடத்துமாறு சுகாதாரத்துறை அமைச்சரிடம் துணை மருத்துவ நிபுணர்களின் கூட்டு கவுன்சில் கேட்டுக்கொள்கிறது.
தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபையின் செயற்பாடுகள் தொடர்பில் நேற்று (03) பாராளுமன்றத்தில் உரையாற்றிய சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாட்டில் பாரிய மருந்து தட்டுப்பாடு காணப்படுவதாகவும், இதற்கு முக்கிய காரணம் மருந்து ஒழுங்குமுறை செயலணியின் பாரிய செயற்திறன்மையே எனவும் தெரிவித்தார்.
குறிப்பாக அரச வைத்தியசாலைகளில் மருந்துகளை பதிவு செய்வதிலும் மீள்பதிவு செய்வதிலும் மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை வினைத்திறன் இன்றி இருப்பதற்கு இதுவே காரணம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.