சீனாவை கட்டுபடுத்தும் முயற்சி: இந்தியாவின் உயர்மட்ட இராணுவ ஜெனரல் அமெரிக்கா பயணம்
சீனாவை கட்டுபடுத்தும் முயற்சியாக இந்தியாவின் உயர்மட்ட இராணுவ ஜெனரல் அமெரிக்காவிற்கு முக்கிய பயணம் மேற்கொள்கிறார்.
புதுடெல்லி:
அமெரிக்கா- இந்தியா இரு நாடுகளின் படைகளுக்கிடையில் பலப்படுத்தப்பட்ட உறவுக்கு அடித்தளம் அமைப்பதற்காக ஒரு உயர்மட்ட இந்திய ராணுவ ஜெனரல் அமெரிக்காவுக்கு செல்கிறார். இரு படைகளுக்கிடையில் இராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கில் அக்டோபர் 17 முதல் 20 வரை அமெரிக்காவில் ராணுவப் பணியாளர்களின் துணைத் தலைவர் லெப்டினென்ட் எஸ்.கே.செய்னி தங்கி இருப்பார்.
முக்கியமாக, இந்திய இராணுவ துணைத் தலைவர் அமெரிக்க இராணுவத்தின் முதல் பயிற்சி மற்றும் உபகரண திறன்களை அமெரிக்க இராணுவ பசிபிக் கட்டளையில் பார்வையிடுவார்.
இராணுவப் பணியாளர்களின் துணைத் தலைவர் இந்தோ-பசிபிக் கட்டளையின் இராணுவ அங்கமான அமெரிக்க இராணுவ பசிபிக் கட்டளையைப் பார்வையிடுவார், மேலும் பயிற்சி மற்றும் உபகரணங்களின் திறன்களைக் கண்டறிவதைத் தவிர இராணுவத் தலைமையுடன் விரிவாக கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வார் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த பயணம் இந்திய மற்றும் அமெரிக்க படைகளுக்கு இடையிலான செயல்பாட்டு மற்றும் மூலோபாய மட்டத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்று அறிக்கை கூறி உள்ளது.
முக்கிய களங்களில் உபகரணங்கள் கொள்முதல் மற்றும் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல் குறித்தும் பேச்சுக்கள் நடத்தப்படும்.