அரசின் புதிய வரி விதிப்பால் வாகனங்களின் விலை மாறலாம் : டொயோட்டா லங்கா.

எதிர்வரும் காலங்களில் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு வாகனங்களை மீள இறக்குமதி செய்ய முடியும் என டொயோட்டா லங்கா நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் இலங்கை சந்தையில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் விலைகளை தற்போது அறிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், வெளியிடப்பட்ட விலைகள் தற்போதுள்ள அரசாங்க வரி கட்டமைப்பு மற்றும் மாற்று விகிதங்களை அடிப்படையாகக் கொண்டவை என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான புதிய வரிக் கட்டமைப்பை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என்றும், அதன் கீழ் விலைகள் மாறும் என்றும், அந்நிய செலாவணி விகிதமும் வாகன விலையை நேரடியாகப் பாதிக்கலாம் என்றும் நிறுவனம் கூறுகிறது.