பிரெஞ்சு அரசாங்கம் கவிழுமா?

பிரெஞ்சு அரசாங்கத்தின் மீது இன்று அல்லது நாளை நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் பிரதமர் மிஷெல் பார்னியெர் (Michel Barnierவ்) பதவி விலக வேண்டியிருக்கும்.
அவரது அரசாங்கம் இவ்வாரம் கவிழக்கூடும் என்ற எதிர்பார்ப்புக் காரணமாக முதலீட்டாளர்கள் அதிகக் கவனத்துடன் இருக்கின்றனர்.
வேகமாக அதிகரித்து வரும் அரசாங்கச் செலவினத்தைச் சரிசெய்யும் நோக்கத்தில் அதிரடி வரவுசெலவுத் திட்டத்தை அரசாங்கம் தாக்கல் செய்துள்ளது.
62.9 பில்லியன் டாலர் மதிப்புள்ள வரி உயர்வையும் செலவினக் குறைப்பையும் வரவுசெலவுத் திட்டம் முன்வைக்கிறது.
நாடு முக்கியமான கட்டத்தில் இருப்பதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.
நம்பிக்கையில்லா வாக்கின் மூலம் மேலும் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தவேண்டாம் என்று அரசியல்வாதிகளை அவர் கேட்டுக்கொண்டார்.
வாக்களிப்பு வெற்றிபெற்றால் 1962க்குப் பிறகு பிரான்ஸில் முதன்முறையாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் அரசாங்கம் கவிழ நேரிடும்.