வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எஸ்எல்வி சி-59 ராக்கெட்
சூரியனின் புறவெளியை ஆய்வு செய்ய ப்ரோபா-3 எனும் இரட்டை செயற்கைக்கோள்களுடன், இந்தியாவின் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின்(இஸ்ரோ) ஓா் அங்கமான ‘நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட்’ அமைப்பு மூலம் வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் வா்த்தக ரீதியாக விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சூரியனின் புறவெளியை ஆய்வு செய்ய ப்ரோபா-3 எனும் இரட்டை செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு (இஎஸ்ஏ) நிறுவனம் வடிவமைத்து இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் நிலைநிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்திலிருந்து புதன்கிழமை (டிச.4) மாலை 4.08 மணிக்கு பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் விண்ணில் ஏவப்பட விருந்தது. இதற்கான 25 மணி நேர கவுன்ட்டவுன் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இறுதிகட்ட சோதனைகளில் ப்ரோபா-3 செயற்கைக்கோளில் சில தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ராக்கெட் ஏவுதல் வியாழக்கிழமை (டிச. 5) மாலை 4.04 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி சி-59 ப்ரோபா-3 எனும் இரட்டை செயற்கைக்கோள்களுடன், இந்தியாவின் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட்
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) கீழ் செயல்படும் ‘நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட்’ நிறுவனம் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, இதுவரை 430-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு செயற்கைக்கோள்களை நியூ ஸ்பேஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. பெரும்பாலான உலக நாடுகளின் விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளுக்கு இஸ்ரோ பங்களித்து வரும் நிலையில், அண்மையில் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு (இஎஸ்ஏ) நிறுவனத்துடன் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது.
அதன்படி, ‘ப்ரோபா-3’ எனப்படும் இஎஸ்ஏ நிறுவனத்தின் இரு செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலம் புவியிலிருந்து 60,500 கி.மீ. தொலைவில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தி சூரியனின் புற வெளிக் கதிர்கள் ஆய்வு செய்யப்படவுள்ளன.
இரு செயற்கைக்கோள்களும் 150 மீட்டா் தொலைவில் அருகருகே பயணித்து சூரியனின் புறவெளியைச் சுற்றி ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு தரவுகளை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.