தலைமன்னார் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு(04) கைது செய்யப்பட்ட மீனவர்களின் 02 படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மீனவர்களை கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்..
தமிழகத்தின் இராமேஷ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.