சதோச மூலம் தேங்காய், அரிசி .. ஒருவருக்கு மூன்று தேங்காய்.. ஐந்து கிலோ அரிசி..
இன்று முதல் சதொச கடைகளின் மூலம் ஒரு தேங்காய் 130 ரூபாவிற்கு விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒரு வாடிக்கையாளர் ஒரே நேரத்தில் மூன்று தேங்காய் மற்றும் ஐந்து கிலோ அரிசியை பெற்றுக்கொள்ள முடியும் என சதொச நிறுவனத்தின் தலைவர் சமித்த பெரேரா குறிப்பிடுகின்றார்.
இந்த அளவு தேங்காய் மற்றும் அரிசியை கொழும்பை சுற்றியுள்ள சதொச கிளைகளில் இன்று முதலும் , நாளை முதல் கொழும்பிற்கு வெளியே உள்ள பகுதிகளிலும் வாங்க முடியும் என சமித்த பெரேரா கூறுகிறார்.