கொண்டைக்கடலை சுண்டல் செய்வது எப்படி….
தேவையான பொருள்கள்
கொண்டைக்கடலை – 1/2 கப்
தேங்காய் துருவல் – 2 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
வறுத்து பொடிக்க –
மிளகாய் வத்தல் – 2
கொத்தமல்லி – 1 மேஜைக்கரண்டி
கடலைப்பருப்பு – 1 மேஜைக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
தாளிக்க –
எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை –
கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பிறகு குக்கரில் 4 விசில் வரை வைத்து வேக வைத்து தண்ணீரை வடித்து விடவும்.
அடுப்பில் கடாயை வைத்து மிளகாய் வத்தல், கொத்தமல்லி, கடலைப்பருப்பு, சோம்பு எல்லாவற்றையும் போட்டு லேசாக வறுத்து சிறிது நேரம் ஆற விடவும். ஆறிய பிறகு மிக்சியில் திரிக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்க்கவும்.
பிறகு அதனுடன் அவித்து வைத்துள்ள கொண்டைக்கடலை, மற்றும் உப்பு சேர்த்து கிளறி அதனுடன் சுண்டல் பொடி சேர்த்து நன்றாக கிளறவும்.
இறுதியில் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான மசாலா சுண்டல் ரெடி. காபி, டீயுடன் பரிமாறவும்….