வீட்டிற்குள் நுழைந்து சுட்டுக் கொலை.
05.12.2024 அன்று இரவு, பதவிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகஹவெவ பகுதியில் வீடொன்றில் இருந்த பெண் ஒருவர் , மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பதவிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
காயமடைந்த பலயவெவ, போகஹவெவ பிரதேசத்தில் வசிக்கும் 73 வயதுடைய பெண் பதவிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு T56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணமோ , சந்தேகநபர்களோ இதுவரையில் வெளியாகவில்லை. பதவிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.