மோசமான விமான நிறுவனங்களில் ஒன்றாக Indigo
இந்தியாவின் ஆகப்பெரிய விமான நிறுவனமான Indigo உலகின் ஆக மோசமான விமான நிறுவனங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.
ஐரோப்பாவைச் சேர்ந்த AirHelp நிறுவனம் இவ்வாண்டுக்கான விமான நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
109 விமான நிறுவனங்களில் 103ஆவது இடத்தில் Indigo உள்ளது.
அந்த ஆய்வை Indigo நிறுவனம் நிராகரித்துள்ளது.
நேரத்துடன் செயல்படுதல், வாடிக்கையாளர்களின் கருத்து, இழப்பீடுகளை வழங்குதல் போன்றவற்றின் அடிப்படையில் AirHelp விமான நிறுவனங்களைப் பட்டியலிடுகிறது.
இந்தியாவின் மற்றொரு விமான நிறுவனமான Air India 61ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
ஆக மோசமான விமான நிறுவனமாக Tunisair வந்துள்ளது.
AirHelp நடத்திய ஆய்வில் கோளாறுகள் இருப்பதாக Indigo பதிலளித்துள்ளது.
அது இந்தியாவின் மொத்த மக்கள்தொகையைப் பிரதிபலிப்பதில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
நேரத்துடன் செயல்படுவதில் நல்ல மதிப்பெண், வாடிக்கையாளர்களிடமிருந்து குறைவான புகார்கள் ஆகியவற்றை அது உதாரணங்களாகக் காட்டியது.