8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மருத்துவப் பட்டம் – குஜராத்தில் 14 போலி மருத்துவர்கள் கைது!
குஜராத்தில் 14 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரின் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுப்பற்றி விரிவாக இங்கே பார்க்கலாம்.
இந்த கும்பலிடம் பட்டம் வாங்கிய 14 போலி டாக்டர்களை குஜராத் போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான டாக்டர் ரமேஷ் குஜராத்தியும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்குக்கூட தலா ₹ 70,000 வசூலித்து மருத்துவப் பட்டங்களை வழங்கினர்.
குஜராத்தின் சூரத்தில் 1,200 போலி டிகிரி தரவுத்தளத்தை வைத்திருந்த கும்பல் பிடிபட்டுள்ளது. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் தலா ரூ.70,000 பெற்றுக்கொண்டு அந்த கும்பல் போலி மருத்துவப் பட்டங்களை வழங்கியது தெரியவந்துள்ளது.
இந்த கும்பலிடம் பட்டம் வாங்கிய 14 போலி டாக்டர்களையும் குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான டாக்டர் ரமேஷ் குஜராத்தியும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவர்களிடம் இருந்த நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள், சான்றிதழ்கள் மற்றும் போலி முத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், போலி டாக்டர் பட்டம் பெற்ற 3 பேர் அலோபதி மருத்துவம் செய்து வருவதாக தகவல் கிடைத்ததையடுத்து, வருவாய்த் துறையினர் போலீசாருடன் இணைந்து அவர்களது கிளினிக்குகளில் சோதனை மேற்கொண்டனர். இதில் அவர்கள் வைத்திருந்தது போலி பட்டங்கள் என்பது தெரியவந்தது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒரு போலி இணையதளத்தில் பட்டங்களை பதிவு செய்து வைத்திருந்ததும் தெரியவந்தது.
விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!
மேலும் போலீசார் விசாரணையில், ஐந்து பேரை வேலைக்கு அமர்த்தி, அவர்களுக்கு எலக்ட்ரோ ஹோமியோபதி தொடர்பாக பயிற்சி அளித்து, மூன்றாண்டுகளுக்குள் படிப்பை முடித்து, எலக்ட்ரோ ஹோமியோபதி மருந்துகளை பரிந்துரைப்பது எப்படி என்று பயிற்சி அளித்தது தெரியவந்தது. இந்த பட்டப்படிப்புக்கு ரூ.70,000 வசூலித்து பயிற்சி அளித்து, இந்த சான்றிதழின் மூலம் அலோபதி, ஹோமியோபதி போன்றவற்றை எந்த பிரச்சனையும் இல்லாமல் பயிற்சி அளித்து வந்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
மேலும், பணம் செலுத்திய 15 நாட்களுக்குள் அவர்கள் போலி சான்றிதழ்களை வழங்கியதுடன், அதை ஒரு வருடத்திற்கு பிறகு ரூ.5,000 முதல் ரூ.15,000 வரை பெற்றுக்கொண்டு புதுப்பிக்க வேண்டும் என்று மோசடியில் ஈடுபட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே, புதுப்பித்தல் கட்டணத்தை செலுத்த முடியாத மருத்துவர்களை அந்த கும்பல் மிரட்டியதாகவும் போலீசார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஷோபித் மற்றும் இர்பான் ஆகிய இருவர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதும் அம்பலமாகியுள்ளது.