காதலை நிராகரித்த முன்னாள் ராணுவ வீரராங்கனை அஹிங்சாவை கொன்ற சூன் பான் வியாபாரி.
இரத்னபுரி சிறிபாகம பகுதியில் 23 வயதுடைய முன்னாள் இராணுவ வீரராங்கனை ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சூன் பான் விற்பனையாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 4ஆம் திகதி காலை 7.30 மணியளவில் சிறிபாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடவல கிலிமலே வெலேகொட வீதியில் இக்கொலை இடம்பெற்றுள்ளது. எம். அஹிங்சா சமன்மலி என்ற யுவதி, தடியால் தலையிலும் உடலிலும் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்து இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த அஹிங்சா நான்கு வருடங்களாக இராணுவத்தில் பணியாற்றிய பின் , அதிலிருந்து விலகிய நிலையில் வீட்டில் தங்கியிருந்ததாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. முச்சக்கர வண்டி சாரதியான சூன் பான் பையன் பல தடவைகள் அவரை காதலிக்க வற்புறுத்திக் கேட்ட போதும் அவர் அதனை மறுத்துவிட்டதாக குடும்பத்தினர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின் போது, குறித்த யுவதி இரத்தினபுரி நகருக்கு அலமாரி ஒன்றை கொள்வனவு செய்வதற்காக சென்று கொண்டிருந்த போது, சிறிபாகம சுதாகல வீதியில் பின்னால் வந்த சந்தேகநபரால் தாக்கப்பட்டுள்ளார். கொலைக்கு பயன்படுத்திய தடியை போலீசார் கண்டுபிடித்துள்ளதுடன், சம்பவம் நடந்த இடத்தில் ரத்தக்கறைகளும் காணப்பட்டன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பிரதி பொலிஸ் மா அதிபர் பவித்ரா தயாரத்னவின் பணிப்புரையின் பேரில் சிறிபாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த அஹிங்சாவின் மரண விசாரணையும், நீதவான் விசாரணையும் நேற்று (05) நடைபெறவிருந்தது.