அமெரிக்கா இந்தியாவைக் குறிவைக்கிறது – நரேந்திர மோடி குற்றச்சாட்டு.
அமெரிக்க வெளியுறவு அமைச்சும் அந்நாட்டில் உள்ள சிலரும் இந்தியாவைச் சீர்குலைக்க முயற்சி செய்வதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். செய்தியாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருடன் சேர்ந்து அமெரிக்கா அந்தச் செயலில் ஈடுபடுவதாகத் மோடி கூறினார்.
அதானி குழுமம் குறித்து அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையைக் கொண்டு திரு காந்தியின் காங்கிரஸ் கட்சி திரு மோடிக்கு எதிராகச் சதி செய்வதாக இந்தியாவின் ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா தெரிவித்தது. அதானி குழுமத்துடன் இந்திய அரசாங்கம் நெருக்கமாகச் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.
அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானியோடு ஏழு பேர் 265 மில்லியன் டாலர் மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்கா அண்மையில் அறிக்கை வெளியிட்டது. இந்திய அரசாங்கம் அதனைக் குறைகூறுவோரை Pegasus தொழில்நுட்பம் கொண்டு வேவு பார்ப்பதாகவும் அது குறிப்பிட்டது.
இந்திய அரசாங்கம் அதை மறுத்துள்ளது.