12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை விளம்பரத்தில் பயன்படுத்த தடை.

ஜனவரி முதலாம் திகதி முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் டொக்டர் ஹசங்க விஜேமுனி தெரிவித்துள்ளார்.

அதற்கான வர்த்தமானி அறிவிப்பை அமுல்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

“குறிப்பாக ஜனவரி 1ஆம் தேதி முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை விளம்பரத்திற்கு பயன்படுத்துவதை நிறுத்துவோம். அதற்கான வர்த்தமானியை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து வேலைகளையும் நாங்கள் செய்துள்ளோம்.

ஏனெனில் கடந்த அரசாங்கங்கள் மூலம் அது 7-8 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த வாரம் நாங்கள் ஒரு முடிவை எடுத்தோம், அதை நாங்கள் ஒத்திவைக்க மாட்டோம், ஜனவரி 1 முதல் இதை அமல்படுத்துவோம்.

Leave A Reply

Your email address will not be published.