அமெரிக்க உதவிச் செயலாளர்,பிரதமர் சந்திப்பு .
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவிச் செயலாளர் டொனால்ட் லு, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை இலங்கை நாடாளுமன்றத்தில் சந்தித்தார். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல், இலங்கையின் பொருளாதார சவால்களுக்கு தீர்வு காண்பது மற்றும் கல்வி மற்றும் நிர்வாக ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.
திறமையான பணியாளர்களை வளர்ப்பதற்கு பொருளாதாரத் தேவைகளுடன் கல்வி முறையை சீரமைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் குறிப்பிட்டார். இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் மற்றும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான சர்வதேச பங்காளித்துவத்தின் பங்கு குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. கல்வி, பாலின சமத்துவம் மற்றும் பொருளாதார சமத்துவம் ஆகிய பரஸ்பர இலக்குகளுக்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.