அமெரிக்காவில் TikTok செயலி தடை செய்யப்படுமா?
அமெரிக்காவில் TikTok செயலி தடை செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TikTok செயலியின் உரிமையாளரான சீனாவின் ByteDance நிறுவனம் அதை அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குள் விற்றாக வேண்டும்.
இல்லாவிட்டால் அந்தச் செயலி அமெரிக்காவில் தடைசெய்யப்படும்.
அமெரிக்காவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று அந்தத் தீர்ப்பை உறுதிப்படுத்தியது.
தீர்ப்பை எதிர்த்துத் தொடர்ந்து போராடப் போவதாக TikTok சொல்கிறது.
அமெரிக்காவின் ஆக உயரிய நீதிமன்றமான
உச்சநீதிமன்றத்தில் TikTok மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
TikTok செயலியை அமெரிக்காவில் மட்டும் 170 மில்லியன் பேர் பார்க்கின்றனர்.
ஜனவரி 19ஆம் தேதிக்குள் சீனநிறுவனம் TikTokஐ விற்றாக வேண்டும். ஜனவரி 20ஆம் தேதி திரு டோனல்ட் டிரம்ப் புதிய அதிபராகப் பொறுப்பேற்பார்.
தடையை ஆதரிக்கப் போவதில்லை என டிரம்ப் சொல்கிறார்.