54 பொலிஸ் OICகள் விரைவில் இடமாற்றம்.
எதிர்வரும் நாட்களில் 50க்கும் மேற்பட்ட காவல்துறை பொலிஸ் பரிசோதகர்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக ‘மவ்பிம’ செய்தி வெளியிட்டுள்ளது.
இடமாற்றம் செய்யப்படவுள்ளவர்களில் கொழும்பு மாவட்டத்தின் கீழ் கடமையாற்றும் பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிகள் பலர் உள்ளதாக பொலிஸ் வட்டாரங்களை மேற்கோள்காட்டி அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
பொலிஸ் பிரிவுகளில் கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர்களும் நிலைய பொறுப்பாளர்கள் இடமாற்றம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பல வருடங்களாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலைய கட்டளைத் பொறுப்பாளர்கள் பதவிகளில் கடமையாற்றிய உத்தியோகத்தர்களும் புதிய இடமாற்றங்களைப் பெற உள்ளனர்.
5 டிஐஜிக்கள் உட்பட 54 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களும் கடந்த வாரம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர், கொழும்பு குற்றப் பிரிவின் பணிப்பாளர், களப் படைத் தலைமையகத்தின் பணிப்பாளர், பொலிஸ் மருத்துவ சேவைகள் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஆகியோர் அவர்களுள் அடங்குவர்.