வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மன்னார் மக்களுக்கு இந்திய மக்களின் நிவாரணம்

.அண்மையில் ஏற்றபட்ட சீரற்ற காலநிலையால், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, இடைத்தங்கல் முகாம்களில் வசித்து வரும் மக்களுக்கு இன்றைய தினம் (07.12) சனிக்கிழமை, யாழ், இந்திய  துணைத் தூதரினால், நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில், தெரிவு செய்யப்பட்ட 1655 பயனாளிகளில், முதற்கட்டமாக,

மன்னார் நகரப் பகுதிக்கு உட்பட்ட துள்ளுக்குடியிருப்பு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 8 கிராமங்களைச்  சேர்ந்த 461 பயனாளிகளுக்கும், மாந்தைமேற்கு பிரதேசச் செயலகப் பிரிவிற்குட்பட்ட  பாலியாறு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள மூன்றாம்பிட்டி கிராமத்தைச் சேர்ந்த 255 பயனாளிகளுக்குமாக  மொத்தம் 716 பயனாளிகளுக்கு முதற்கட்டமாக, இன்று (7) இந்திய மக்களின் உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் யாழ் இந்திய துணைத் தூதர் ஸ்ரீ சாய் முரளி, இந்திய துணைதூதரக அதிகாரி, மற்றும்  மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உட்படகுறித்த பகுதியைச் சேர்ந்த கிராம சேவையாளர்கள் ஆகியோர் கலந்து  கொண்டிருந்தனர்.

அண்மையில்  வன்னி பாராளுமன்ற உறுப்பினர், காதர் மஸ்தான்,இந்திய. உயர் ஸ்தானிகரைச் சந்தித்து விடுத்த வேண்டுகோளின் பேரிலேயே, குறித்த நிவாரணம் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.