அரிசியின் மொத்த விலை, சில்லறை விலை தொடர்பான அறிவிப்பு. பின்பற்றாதவர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கை -ஜனாதிபதி தெரிவிப்பு.
வர்த்தக,வணிக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அரிசி வியாபாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07)கலந்துரையாடல்
நடைபெற்றது.
ஒரு கிலோ நாடு அரிசியின் 225 ரூபாய் மொத்த விலைக்கும் 230 ரூபா சில்லறை விலைக்கும் பாவனையாளர்களுக்க வழங்குமாறு அரிசி விற்பனையாளர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களால் வழங்கப்பட்டது.
இது தொடர்பில் அடுத்த பத்து நாட்களுக்குள் அவதானமாகச் செயற்படுமாறும், இதற்கு முரணாக செயற்படும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு ஜனாதிபதியால் அறிவுரை வழங்கப்பட்டது.
நாட்டில் நெடுஞ்சாலைத் துறைக்காகவே அதிகளவில் முதலீடு செய்யப்படுவதாகவும், அடுத்து நீர்ப்பாசனத் துறைக்கும் விவசாயத் துறைக்குமே அதிக முதலீடு செய்யப்படுவதாகவும் நான் சுட்டிக்காட்டியதோடு ,விவசாயிகளுக்கே அதிக நிவாரணங்கள் வழங்கப்படுகிறது எனவும் நெல் கொள்வனவிற்காக வியாபாரிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுவதாகவும் அதனால் மக்களின் அரிசியை நுகரும் உரிமையில் கைவைக்க வேண்டாம்
அதன்படி அரிசி விலைகள் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
நாடு அரிசி ஒரு கிலோ மொத்த விலை 225 ரூபா. சில்லறை விலை 230 ரூபா
வெள்ளை அரிசி மொத்த விலை 215 ரூபாய். சில்லறை விலை 220 ரூபா
இறக்குமதி செய்யப்படும் நாடு அரிசி கிலோ 220 ரூபா
சம்பா அரிசி மொத்த விலை 235 ரூபா. சில்லறை விலை 240 ரூபா
கீறி சம்பா அரிசி மொத்த விலை 255 ரூபா. சில்லறை விலை 260 ரூபா
அதேபோல் நாளாந்தம் அரிசி ஆலைகளிலிருந்து வெளிவரும் அரிசியின் அளவினைக் கணக்கிடுமாறும் நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
அதே போன்று அரிசி தொடர்பான பிரச்சினைகளை அரசாங்கத்துடன் சுமூகமாக தீர்த்துக் கொள்ளுமாறும் அரிசி வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.