புதுப் பட விமர்சனத்துக்குத் தடை.

புதுத் திரைப்படங்கள் குறித்து சமூக ஊடகங்களில் விமர்சனங்களை வெளியிட தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததற்கு சங்க நிர்வாகிகள் சிலரே எதிர்ப்பு தெரிவித்துள்ளனராம்.

இந்நிலையில், இதுகுறித்து அச்சங்கம் விளக்கம் அளித்துள்ளது. சில ஊடகங்கள் தனிப்பட்ட வன்மத்துடன் சில படங்களுக்கு எதிராக விமர்சனம் செய்வதையும் தனி மனித தாக்குதலையும் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அச்சங்கம் கூறியுள்ளது.

“பெரும்பாலான ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் திரையுலகுக்கு ஆதரவாக உள்ளதாக பலமுறை கூறியுள்ளோம். பல படங்களின் வெற்றிக்கு ஆதரவு அளித்துள்ளனர் என்பதை மீண்டும் குறிப்பிட விரும்புகிறோம்.

“சங்கத்தின் இந்த முயற்சி அனைத்து ஊடகங்களுக்கும் எதிரானது அல்ல. ஒட்டுமொத்தமாக அனைவரையும் புறக்கணிப்பதும் நமது நோக்கமல்ல,” என்று அச்சங்கம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் வெளியான ‘கங்குவா’ படத்துக்கு சமூக ஊடகங்களில் அதிக அளவில் எதிர்மறை விமர்சனங்கள் வெளியாகின. இதற்கு ஜோதிகா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.