நாட்டிற்கு வெளியே மறைத்து வைக்கப்பட்டுள்ள செல்வத்தை மீட்க தொழில்நுட்ப உதவியை வழங்க அமெரிக்கா ஒப்புதல்!
இலங்கையில் இருந்து கொண்டு செல்லப்பட்டுள்ள பணத்தை மீளக் கொண்டுவருவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்கத் தயார் என அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் டொனால்ட் லு தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிரான திட்டத்திற்கு தேவையான போதெல்லாம் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார்.
இலங்கையின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் உதவி இராஜாங்க செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு (டொனால்ட் லு) ஆகியோருக்கிடையில் நேற்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் இந்த உறுதிப்பாடு வெளிப்படுத்தப்பட்டது.