இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி.
அடிலெய்டில் நடந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 2வது டெஸ்ட் போட்டில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 180 ரன்களிலும், ஆஸ்திரேலிய அணி 337 ரன்களிலும் ஆட்டமிழந்தது. 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய இந்திய அணி, 175 ரன்களில் ஆட்டமிழந்தது.
இதையடுத்து 19 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 3.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.