பிரதமா் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து, மும்பை காவல் துறையின் வாட்ஸ்ஆப்க்கு வந்த மெசேஜ்!
பிரதமா் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து, மும்பை காவல் துறையின் வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் வந்துள்ளது. இது தொடா்பாக காவல் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
மும்பை காவல்துறையின் போக்குவரத்து பிரிவு வாட்ஸ்ஆப் உதவி எண்ணுக்கு வந்த தகவலில், பிரதமரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட உள்ளதாகவும், 2 ஐஎஸ்ஐ முகவா்கள் இதில் ஈடுபட உள்ளதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் பதிவு செய்யப்பட்ட எண்ணில் இருந்து வாட்ஸ் ஆப் தகவல் அனுப்பப்பட்டதை காவல்துறையினா் கண்டறிந்தனா். தகவல் அனுப்பிய நபா், மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் அல்லது மது போதையில் இதுபோன்ற தகவலை அனுப்பியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடா்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நபரை பிடிக்க மும்பை காவல் துறையினா் ராஜஸ்தான் விரைந்துள்ளனா்.
மும்பை காவல் துறையின் உதவி எண்ணுக்கு இதுபோன்ற போலி மிரட்டல்கள் வருவது சமீப காலமாக அதிகரித்துள்ளது.