2 நாளில் 449 கோடி – ‘புஷ்பா 2’ வசூல் சாதனை.
புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மூன்று நாளுக்கு முன்னர் (5 டிசம்பர்) வெளியானது.
2021ஆம் ஆண்டில் வெளியான படத்தின் முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகத்தில் வசூல் அதிகம்.
Hindustan Times அது பற்றித் தகவல் தெரிவித்தது.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மண்டானா, ஃபஹத் ஃபாசில் ஆகிய பிரபல நடிகர்கள் படத்தில் நடித்துள்ளனர்.
புஷ்பா படத்தின் முதல் பாகம் உலகளவில் 350 கோடி ரூபாய் (சுமார் 5 மில்லியன் வெள்ளி) வருவாயைக் கொண்டுவந்தது.
படத்தின் இரண்டாம் பாகம், வெளியிடப்பட்ட 2 நாளில் உலகளவில் 449 கோடி ரூபாய் (சுமார் 7 மில்லியன் வெள்ளி) லாபத்தை ஈட்டியுள்ளதாக Sacnilk.com இணையத்தளம் தெரிவித்தது.
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் இதுவரை நடித்த படங்களில் ஆக அதிகமான லாபத்தை ஈட்டிய படம் இது என்று Hindustan Times தெரிவித்தது.