சிரியா அரசை கவிழ்த்த சர்வதேச புலனாய்வு அமைப்புகளையே வியப்பில் ஆழ்த்தும் இஸ்லாமிய ஆயுதக் குழு.
சர்வதேச புலனாய்வு அமைப்புகளையே வியப்பில் ஆழ்த்தும் வகையில் பஷர் அல் அசாத்தின் அரசை அதிரடியாகக் கவிழ்த்த தஹ்ரிர் அல்-ஷாம் என்ற இஸ்லாமிய ஆயுதக் குழு நேற்று சிரியாவில் அதிகாரம் பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அசாத் குடும்பம் சிரியாவை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆட்சி செய்தது, 1971 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு நாட்டை ஆண்டு வந்த அவரது தந்தை ஹபீஸ் அல்-அசாத் இறந்த பிறகு பஷர் அல்-அசாத் ஆட்சிக்கு வந்தார்.
இஸ்லாமிய ஆயுதக் குழுவின் படையெடுப்பால் அரசாங்க இராணுவம் பின்வாங்கியதாகவும், கடைசி நேரத்தில் அந்நாட்டு அசாத் எதிர்ப்பு மக்களும் கிளர்ச்சியாளர்களின் ஆதரவுடன் இணைந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாத் ஆட்சியின் வீழ்ச்சியை மக்கள் வீதிக்கு வந்து கொண்டாடுவதைக் காணமுடிகிறது.