சிரியாவில் உள்ள ஈரான்-ஈராக் தூதரக அதிகாரிகள் வெளியேற்றம் .
இஸ்லாமிய ஆயுதக் குழு டமாஸ்கஸைச் சுற்றி வளைப்பதற்கு சற்று முன்னதாக ஈரான் மற்றும் ஈராக் தங்கள் தூதரக அதிகாரிகள் வெளியேறியதாக அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இஸ்மாயில் பாகேயை மேற்கோள் காட்டி டெஹ்ரான் டைம்ஸ் செய்தி நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரான் தூதரக அதிகாரிகள் பத்திரமாக இருப்பதாக இஸ்மாயில் பாகே தெரிவித்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் உள்ள தனது தூதர்கள் லெபனானுக்கு புறப்பட்டுச் சென்றதாக ஈராக் அறிவித்துள்ளது.
இதேவேளை, சிரியாவின் தற்போதைய நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாகவும் துருக்கி தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்போதுள்ள சூழ்நிலையை நாட்டில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகள் சாதகமாக பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய இஸ்லாமிய ஆயுதக் குழுவுடன் தொடர்பு கொள்வதாக துருக்கியின் வெளியுறவு அமைச்சர் ஹேகன் ஃபிடான் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.