சிரியாவில் மீண்டும் அமைதி திரும்பியுள்ளது : உலக நாடுகள் உறுதி.
சிரியாவின் நீண்ட நாள் அதிபர் பஷார் அல்-அசாதின் (Bashar al-Assad) ஆட்சி கவிழ்ந்துள்ளது.
ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (Hayat Tahrir al-Sham) குழுவின் தலைமையில் கிளர்ச்சியாளர்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர்.
சிரியாவிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் நிலைத்தன்மையைக் கொண்டுவருவதில் உதவ உலகத் தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர்.
அமெரிக்கா
சிரியாவில் சுதந்திரமான அரசாங்கத்தை உருவாக்க அனைத்துத் தரப்புகளுடனும் சேர்ந்து செயல்படப்போவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
திரு அசாத் அவரின் செயல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
சீனா
சிரியாவின் நிலையை அணுக்கமாகக் கவனித்துவருவதாகச் சீன வெளியுறவு அமைச்சு கூறியது.
சிரியாவில் கூடிய விரைவில் நிலைத்தன்மை திரும்பும் என்று எதிர்பார்ப்பதாக அது குறிப்பிட்டது.
ஈரான்
சிரியாவுடனான நட்புறவு தொடரும் என எதிர்பார்ப்பதாக ஈரானிய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
ஐக்கிய நாட்டு நிறுவனம்
கிட்டத்தட்ட 14 ஆண்டாக உள்நாட்டுப் போரில் அவதியுற்ற சிரியாவில் இது முக்கியமான தருணம் என்று நிறுவனம் சொன்னது.
சிரியர்கள் அனைவருக்கும் அமைதியையும் கண்ணியத்தையும் கொண்டுவரும் புதிய அத்தியாயம் தொடங்கும் என நம்புவதாக அது குறிப்பிட்டது.
ஜெர்மனி
அசாதின் ஆட்சிக் கவிழ்ப்பு நல்ல செய்தி என்று ஜெர்மானியப் பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ் (Olaf Scholz) கூறினார்.
சிரியாவில் மீண்டும் அமைதி நிலைக்க ஜெர்மனி உதவத் தயார் என்றார் அவர்.