தென் கொரிய அதிபர் பதவி விலகுவாரா? பதவி விலகல் குறித்த கலந்துரையாடல் !
தென் கொரியாவின் ஆளும் மக்கள் சக்திக் கட்சி அதிபர் யூன் சுக் இயோலின் (Yoon Suk Yeol) பதவி விலகல் குறித்த கலந்துரையாடல் தற்போது நடைபெறுகிறது.
யூன் அதிபர் பதவியிலிருந்து சீராக முன்கூட்டியே விலகுவதை எதிர்த்தரப்பு ஜனநாயகக் கட்சி எதிர்க்கிறது.
அதற்குப் பதிலாக ராணுவச் சட்டத்தை அவர் அறிவித்தது குறித்துச் சிறப்பு மன்ற விசாரணை நடத்தப்படவேண்டும் என்று அது கோருகிறது.
அதற்கான மசோதாவை வரும் வியாழக்கிழமை (12 டிசம்பர்) நாடாளுமன்றத்தில் ஜனநாயக் கட்சி தாக்கல் செய்ய முற்படுகிறது.
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் யூன் உடனடியாகக் கைது செய்யப்படவேண்டும் என்று வலியுறுத்தினர்.
யூன்மீது அரசியல் குற்றச்சாட்டுக் கொண்டுவருவதற்கான வாக்கெடுப்பை நாடாளுமன்றத்தில் மீண்டும் நடத்த எதிர்க்கட்சித் தலைவர் திட்டமிடுகிறார்.
வரும் சனிக்கிழமை 14ஆம் தேதி அது இடம்பெறக்கூடும்.