கனேடிய பொலிஸாரிடம் சிக்கிய ஆவா கும்பல் அஜந்தன்…கனடாவிலும் கொலை… கப்பம் ….
யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த “ஆவா கும்பலின்” தலைவன் என கூறப்படும் அஜந்தன் கனடாவில் நேற்று (8) கனேடிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அஜந்தன் சுப்ரமணியம் என்ற பிரசன்ன நல்லலிங்கம் 34 வயதுடையவர் எனவும் வடக்கில் கப்பம் கோருதல், வாள்வெட்டு மிரட்டல் போன்ற பல குற்றச்செயல்கள் இவரின் தலைமையில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இவர் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் சில நாட்களுக்கு முன்னர் சர்வதேச பொலிஸாருக்கு அறிவித்திருந்த நிலையில், கனடாவில் உள்ள தமிழ் குடும்பத்தை அச்சுறுத்தி பணம் கேட்ட சம்பவம் தொடர்பில் அவர்கள் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ஆவா கும்பலின் தலைவன் என கனேடிய பொலிஸாரினால் தகவல் வெளியாகியுள்ளது.
2021ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து கனடாவுக்குத் தப்பிச் சென்ற இந்த நபர், 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவத்திற்காக கனடா பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர் இவர் என்பதும் தெரியவந்துள்ளது.
“யாழ்ப்பாணம் பொலிஸில் ஆவா கும்பலின் தலைவனுக்கு எதிராக சுமார் 45 முறைப்பாடுகள் உள்ளன, யாழ் நீதிமன்றம் அவருக்கு 9 தடவைகள் பிடியாணை பிறப்பித்துள்ளது.