புஷ்பவனம் மீனவ கிராம கடற்கரையில் கரை ஒதுங்கிய மியான்மர் நாட்டு மூங்கில் தெப்பம்!
வேதாரண்யம் அருகே கடலில் மிதந்து திங்கள்கிழமை கரை ஒதுங்கிய மியான்மர் நாட்டு மூங்கில் தெப்பம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே புஷ்பவனம் மீனவ கிராம கடற்கரையில் மியான்மர் நாட்டைச் சேர்ந்த மூங்கில் மரங்களால் செய்யப்பட்ட தெப்பம் ஒன்று கரை ஒதுங்கியது.
மீன்பிடிப் பயன்பாட்டுக்கானதாக கருதப்படும் இந்த தெப்பம் 40 அடி நீளம், 15 அடி அகலம், 8 அடி உயரம் கொண்டதாகவும் அமைந்துள்ளது.
மழை நேரங்களில் தங்குவதற்கு ஏற்றார்போல் 6 அடி நீளம் 4 அடி அகலம் 4 அடி உயரம் கொண்ட ஓலையால் மேற் கூரையும் உள்ளது.
படகில், மீன் பிடிக்க பயன்படுத்திய கோழி தீவனம் 2 மூட்டை (சுமார் 30 கிலோ ) உள்ளது.