கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ASP நெவில் சில்வா கைது!
கொழும்பு குற்றப் பிரிவின் (CCD) முன்னாள் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாணிக்கக்கல் கொடுக்கல் வாங்கல் தொடர்பான சம்பவமொன்றின் அடிப்படையில் கடத்தல் மற்றும் சட்டவிரோதமான முறையில் சிறையில் அடைக்கப்பட்ட வழக்கு தொடர்பில் இந்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.