உதிரம் வழங்கி உயிர்களைக் காப்போம்!தேசிய இளைஞர் படையணி அழைப்பு!

எதிர் வரும் (12.12) காலை 8 .30மணி முதல் மாலை 3 மணி வரை, மன்னார்,இரண்டாம் கட்டைப் பகுதியில் அமைந்துள்ள தேசிய இளைஞரணி வளாகத்தில் நடைபெறவிருக்கும் மாபெரும் இரத்த தான முகாமில் கலந்து கொள்ளுமாறு,தேசிய இளைஞர் படையணியின் பொறுப்பதிகாரி கப்டன் சர்ராஜ் ,மன்னார் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்,
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மன்னார் வைத்திய சாலையில் நிலவுகின்ற குருதித் தட்டுப்பாடு காரணமாகவே நாங்கள் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளோம். ஏற்கனவே இரத்த தான முகாம் நடத்தியுள்ளோம் அதில் பலரும் கலந்து கொண்டு குருதிக் கொடையளித்தார்கள். அவ்வாறே எதிர் வருகின்ற (12) நடைபெற இருக்கும் ரத்த தான முகாமிலும் கலந்து கொள்வதாகப் பலர் உறுதியளித்துள்ளார்கள்.
அந்த வகையில் இதனைத் திறம்பட நடாத்த ஏற்பாடு செய்துள்ளோம். அதே வேளை இரத்த தானம் வழங்குவோருக்கான சிற்றுண்டி ஏற்பாடுகளும் செய்துள்ளோம்.” எனத் தெரிவித்தார்.
மேலும், இரத்தம் வழங்குபவர்கள் தங்களது அடையாள அட்டைகளைத் தவறாது எடுத்து வரவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.