உள்ளூர் அரிசிக்கான அதிகபட்ச விலை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல்.

உள்ளூர் அரிசிக்கான அதிகபட்ச விலை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி,

ஒரு கிலோகிராம் வெள்ளை/சிவப்பு பச்சை அரிசியின் அதிகபட்ச மொத்த விலை ரூ.215 ஆகவும், அதிகபட்ச சில்லறை விலை ரூ.220 ஆகவும் உள்ளது.

வெள்ளை/சிவப்பு நாடு அரிசியின் அதிகபட்ச மொத்த விலை ரூ.225 ஆகவும், அதிகபட்ச சில்லறை விலை ரூ.230 ஆகவும் உள்ளது.

வெள்ளை/சிவம்பு சம்பா அரிசியின் மொத்த விலை ரூ.235 ஆகவும், அதிகபட்ச சில்லறை விலை ரூ.240 ஆகவும் உள்ளது.

கீரி சம்பா பச்சை மற்றும் வேக வைத்து/அவித்து பெறப்பட்ட அரசியின் மொத்த விலை ரூ.255 ஆகவும், அதிகபட்ச சில்லறை விலை ரூ.260 ஆகவும் உள்ளது.

விநியோகஸ்தர் அல்லது வியாபாரிகள் எவரும் இந்த தொகையை மீறி அரிசியை விற்பனை செய்யவோ, வழங்கவோ, விற்பனைக்கு விடவோ அல்லது வெளிப்படுத்தவோ, விற்பனைக்காக காட்சிப்படுத்தவோ முடியாது என்றும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.