OPEC நிதியத்திடம் இலங்கை அரசாங்கம் கோரிய கடனுக்கு பச்சை விளக்கு.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் அமுல்படுத்தப்படும் விரிவான நிதியளிப்பு வசதித் திட்டத்துடன் இணைந்து, இலங்கையின் விரிவான சீர்திருத்த நிகழ்ச்சி நிரலுக்கு நிதியளிப்பதற்காக சர்வதேச அபிவிருத்திக்கான OPEC நிதியத்திடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கையை சமர்ப்பித்துள்ளது.
கொள்கை அடிப்படையிலான கடனின் கீழ் 50 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் தொகையை வழங்க நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.
இந்தக் கடன் இலங்கையில் நடைமுறையில் உள்ள நிதியளிப்புத் திட்டத்தின் அளவுருக்களுடன் ஒத்துப்போகிறது என்பதை சர்வதேச நாணய நிதியமும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்படி, மேற்படி கடன் தொகையை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச அபிவிருத்திக்கான OPEC நிதியத்துடன் கடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள நிதி, கொள்வனவு மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சர்கள் சபை அங்கீகாரம் வழங்கியது.