மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை- நளிந்த

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்காகவே மின்சாரக் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

காட்டப்படும் விலையின்படி கடந்த ஆறு மாதங்களாக மின்சார உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதாகவும், அதற்கேற்ப எரிபொருள் ஆலைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் மின்சார உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆனால் அடுத்த 6 மாதங்களில் மின் உற்பத்தி செலவு குறையும் என்பதால் மின் கட்டணத்தை குறைக்கலாம் என்றும் அவர் கூறினார்.

எனினும் அரசாங்கம் உறுதியளித்தபடி முப்பதிலிருந்து முப்பத்தைந்து வீதம் வரை மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என்றும் அவர் கூறுகிறார்.

Leave A Reply

Your email address will not be published.