கல்வி அமைச்சின் வரவு செலவு திட்டம் தொடர்பான விவாதம் ஜனாதிபதி தலைமையில் !

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தை தயாரிப்பதற்கான அமைச்சர்கள் மட்டத்தில் ஆரம்பமான கலந்துரையாடல்கள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஆரம்பமாகியுள்ளன.
இவ்வாறு ஒரு கட்டமாக கல்வி அமைச்சின் வரவு செலவு திட்டம் தொடர்பான வரவு செலவு திட்ட முன்மொழிவுகள் மீதான விவாதம் இன்று (10) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, கல்வி அமைச்சின் நாலக களுவெவ மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் குழு இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்