காப்புறுதி நிறுவனத் தலைவர் கொலை சந்தேக நபர் , 5 நாட்களுக்குப் பின் கைது.
அமெரிக்காவில் காப்புறுதி நிறுவனம் ஒன்றின் தலைவரைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்பட்ட ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
UnitedHealth நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிராயன் தாம்சனைக் (Brian Thompson) கொலை செய்தவரைக் காவல்துறையினர் 5 நாளாகத் தேடிவந்தனர்.
சந்தேக நபர் 26 வயது லுய்கி மெஞ்ஜியோனி (Luigi Mangione) பென்சில்வேனியா (Pennsylvania) மாநிலத்தின் McDonald’s விரைவு உணவுக் கடையில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது பிடிபட்டார்.
மெஞ்ஜியோனியிடமிருந்து சொந்தமாக உருவாக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.
அது தனிப் பாகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதால் அதை அடையாளம் காண்பது கடினம்.
மேலும் அது முப்பரிமாண அச்சிடும் இயந்திரத்தால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
அமெரிக்காவின் பெருநிறுவன மனப்போக்குக்கு எதிராக மெஞ்ஜியோனிக்குக் கோபம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அவர் பென்சில்வேனியா பல்கலைக்கழக்கத்தில் 2 பொறியியல் பட்டங்களைப் பெற்ற சிறந்த மாணவர் என்று தெரிவிக்கப்பட்டது.