திருமணக் கனவுகளுடன் இந்தியாவிற்குத் வந்த மாப்பிள்ளை : வந்த பின் பெண் இல்லாமல் ஏமாந்த மாப்பிள்ளை.

துபாயிலிருந்து திருமணக் கனவுகளுடன் இந்தியாவிற்குத் திரும்பிய மாப்பிள்ளைக்குக் காத்திருந்தது ஏமாற்றம் , 24 வயது தீபக் குமார் பஞ்சாப் மாநிலத்தின் மோகா நகருக்கு 150 பேருடன் அவரது திருமணத்திற்காகச் சென்றிருக்கிறார்.

அவரும் மன்பிரீட் கவுர் (Manpreet Kaur) என்ற பெண்ணும் மூன்றாண்டாக Instagram வழி காதலித்து வந்ததாக The Hindustan Times செய்தி நிறுவனம் கூறியது.

ஆனால் இருவரும் நேரில் சந்தித்தது இல்லை.

திருமணத்திற்காக மோகாவிற்குச் சென்ற பின்புதான் தெரியவந்தது…

அப்படி ஒரு பெண்ணும் இல்லை…

அப்படி ஒரு கல்யாண மண்டபமும் இல்லை என்று…

மணப்பெண்ணைத் தொடர்புகொள்ளவும் முடியவில்லை.

தீபக் குமார் காவல்துறையிடம் புகார் அளித்திருப்பதாக The Hindustan Times கூறியது.

இருவரின் பெற்றோரும் தொலைபேசி மூலம் திருமண ஏற்பாடுகளைச் செய்ததாகத் தீபக் குமார் சொன்னார்.

மன்பிரிட்டிற்கு பணம் அனுப்பி வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.