இலங்கையில் இனம் தெரியாத காய்ச்சல் ஒன்று பரவி வருகிறது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் இரண்டு நாட்களுக்குள் திடீர் காய்ச்சலால் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்களில் மூவர் உயிரிழந்தமை தொடர்பில் இன்று (10) முதல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி கூறினார்.
இவ்வாறு உயிரிழந்தவர்களின் பல உடல் பாகங்கள் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.
காய்ச்சலால் மருத்துவமனையில் இருந்தபோது மக்கள் இறந்துள்ளனர், ஆனால் காய்ச்சல் உறுதியாக கண்டறியப்படுவதற்கு முன்பே அவர்கள் இறந்துவிட்டதால் மருத்துவமனையின் மருத்துவர்கள் கடுமையான பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பருத்திதுறை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய நபரும், நாவற்குளி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரும், கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட 28 வயதுடைய ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.
காய்ச்சல் மற்றும் இருமல் உள்ள நோயாளிகள் உடனடியாக அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்கு சென்று இரத்த மாதிரியை பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியமானது என யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.