சிரியாவின் இடைக்கால பிரதமராக முஹம்மது அல் பஷீர் நியமனம்.
சிரியாவின் இடைக்கால பிரதமராக முஹம்மது அல் பஷீர் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, அவர் அடுத்த வருடம் மார்ச் 01ஆம் திகதி வரை பதவி வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர், முன்னதாக கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த அரசாங்கத்தின் தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார். கடந்த 08ஆம் திகதி சிரியாவின் ஜனாதிபதியாக இருந்த, பஷார் அல் அசாத் தனது பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில், அந்நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைக்கு மத்தியில் முஹம்மது அல் பஷீர் இடைக்கால பிரதமராக நியமனம் பெற்றுள்ளார்.
முஹம்மது அல்-பஷீர் 2025 மார்ச் 1 ஆம் திகதி வரை இடைக்கால சிரிய அரசாங்கத்தின் காபந்து பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அவர் தொலைக்காட்சி அறிக்கையில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.