கலாநிதி பட்டம் குறித்து உரிய நேரத்தில் பதில் அளிக்கப்படும்.

சபாநாயகர் அசோக ரன்வல பெற்றதாக கூறப்படும் கலாநிதி பட்டம் குறித்து சமூகத்தில் சர்ச்சையான விவாதம் உருவாகியுள்ளது. அவர் உண்மையில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளாரா? என்பதை சபாநாயகர் உறுதிப்படுத்த வேண்டும் எனவும், இந்த சந்தேகத்தை அரசாங்கம் நீக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.

சபாநாயகர் அசோக ரன்வல பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பே, அவரைப் பற்றிய அறிமுகங்களில் கலாநிதி என்ற பட்டம் பயன்படுத்தப்பட்டு, அவர் சபாநாயகரான பிறகும், இலங்கை நாடாளுமன்ற இணையதளத்தில் அவரது பெயர் கலாநிதி அசோக ரன்வல என்று பதிவு செய்யப்பட்டது.
ஆனால், அவருக்கு சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட கலாநிதி பட்டம் இல்லை என பல்கலைக்கழக பேராசிரியர்கள் உட்பட பல தரப்பினரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்ததால் சமூகத்தில் விவாதம் உருவானது.

இதேவேளை, நாடாளுமன்ற இணையத்தளத்தில் அவரது பெயருக்கு முன்னால் உள்ள கலாநிதி நீக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் சந்தேகங்களை வெளியிட்டு வருகின்றனர். இது குறித்து சபாநாயகர் அசோக ரன்வலவிடம் ஊடகங்கள் வினவிய போது, ​​இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு உரிய நேரத்தில் பதில் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.