ஜெரோம் பெர்னாண்டோ போன்றவர்களை நம்பி ஏமாறாதீர்கள்… கத்தோலிக்க விசுவாசிகளை ஆயர் பேரவை கேட்டுக்கொள்கிறது!
பேராயர் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் ஜெரோம் பெர்னாண்டோ போன்றவர்களிடம் ஏமாற வேண்டாம் என்றும் அவர் கத்தோலிக்கத் திருச்சபையுடன் தொடர்புள்ளவர் அல்ல என்றும் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கத்தோலிக்க விசுவாசிகளின் தகவலுக்காக , அறிவிப்பை வெளியிட்டுள்ள கத்தோலிக்க ஆயர்கள் பேரவை, கத்தோலிக்க திருச்சபையின் உத்தியோகபூர்வ அப்போஸ்தலிக்க வாரிசு இல்லாமல் ஜெரோம் பெர்னாண்டோ கத்தோலிக்க பிஷப் அல்ல என்பதை உறுதியாகத் தெரிவிக்கிறது.
கத்தோலிக்க ஆயர்கள் பேரவை வெளியிட்டுள்ள அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.