பெருந்தோட்ட மக்களுக்கு தொடர் மாடிக் குடியிருப்புகள்..
பெருந்தோட்ட மக்களுக்கான குடியிருப்புகளை நிர்மாணிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்காக ஏழு பேர்ச் இடம் ஒதுக்கப்பட்டால் அதற்கு பாரியளவிலான காணியை ஒதுக்க வேண்டியிருக்கும் என அதன் செயலாளர் குறிப்பிடுகின்றார்.
இதன்படி, பெருந்தோட்ட மக்களுக்கான தொடர் மாடிக் குடியிருப்புகளை நிர்மாணிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக செயலாளர் தெரிவித்தார்.