72 கோடியை மோசடி செய்துவிட்டு இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற தம்பதியர் இரண்டு துப்பாக்கிகளுடன் , கனேடிய ரொறன்ரோ பொலிசாரால் கைது.

சட்டவிரோதமான முறையில் ஆயுதம் வைத்திருந்த இலங்கை தமிழ் தம்பதியொன்று, ரொறொன்ரோ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றை சோதனையிட்ட டொராண்டோ காவல்துறையின் 42 வது பட்டாலியன் அதிகாரிகள், வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, வாகனத்தில் இருந்த ஒருவரது இடுப்பில் துப்பாக்கி ஒன்று இருப்பதை அவதானித்துள்ளனர்.
பின்னர், சந்தேகநபர் மற்றும் அவர் பயணித்த வாகனத்தை சோதனையிட்ட போது, தோட்டாக்கள் லோட் செய்யப்பட்ட இரண்டு துப்பாக்கிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
ரொறன்ரோவைச் சேர்ந்த 37 வயதுடைய தனராஜ் தங்கராசா மற்றும் அவரது மனைவி கிஷானி பாலச்சந்திரன் (37) ஆகியோரே கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை (03) ரொறன்ரோ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவர் மீதும் இலங்கை பொலிஸில் 11 குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், இவர்கள் பல்வேறு நபர்களிடம் 720 மில்லியன் பணத்தை ஏமாற்றி கனடாவுக்கு தப்பிச் சென்ற தம்பதிகள் எனவும் தெரியவந்துள்ளது. இந்தக் கைது தொடர்பில் ரொறொன்ரோ காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு இதோ …..