இசுருபாயவுக்கு முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஆர்ப்பாட்டத்தில் பொலிஸ் அதிகாரிகளை வெட்டியவர், இராணுவப் புலனாய்வு அதிகாரி …
68 லட்சம் ஆணையை வைத்து சூதாட்டத்தை ஆரம்பித்து விட்டதா அரசு? வீதியில் இறங்கிய மக்கள் பிரதிநிதிகளை, மக்களின் உரிமைகளை காக்க வந்துள்ள அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து நாடு கவனிக்க தொடங்கியுள்ளது!
ஆசிரியர் நியமனம் கோரி பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவினால் பத்தரமுல்ல இசுருபாய கல்வி அமைச்சின் முன்பு முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களை கூரிய ஆயுதத்தால் வெட்டி காயப்படுத்திய நபர் இராணுவ புலனாய்வு அதிகாரி என இதுவரையான விசாரணையில் தெரியவந்துள்ளதாக தலங்கம பொலிஸார் நேற்று (10) கடுவலை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
உடனடியாக முறையான விசாரணைகளை நடத்தி விசாரணையின் முன்னேற்றத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்ட கடுவெல நீதவான் சாகிமா விஜேபண்டார, பொலிஸ் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நால்வரையும் தலா ஒரு லட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்கவும் உத்தரவிட்டார்.
ஆர்ப்பாட்டத்தின் போது, பிரதான வீதியில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்ற முற்பட்ட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் வெட்டப்பட்டதுடன், வெட்டுக்கு காரணமான நபரை , போராட்டக்காரர்கள் அடையாளம் கண்டு, பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
குறித்த நபரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றில் அறிவித்தனர். நீல சட்டை அணிந்த நபர் , அன்றைய தினம் காலை முதல் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் பிரசன்னமாகியிருந்ததாகவும், தமது வாடிக்கையாளரை தாம் செய்த குற்றத்தை நம்ப வைப்பதற்காகவே குறித்த நபர் பொலிஸ் உத்தியோகத்தர்களை வெட்டியுள்ளார் எனவும் சந்தேகத்திற்குரிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.
குறித்த நபரை சந்தேக நபராக பெயரிடுவதற்கு பொலிஸார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என சுட்டிக்காட்டிய பிரதிவாதி சட்டத்தரணிகள், அடையாள அணிவகுப்பின் பின்னர் தமது கட்சிக்காரரை பிணையில் விடுவிக்குமாறு நீதவானிடம் கோரிக்கை விடுத்தனர்.
சந்தேகத்திற்குரிய பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக சட்டத்தரணிகளான ஷான் ரணசூரிய, தசுன் நாகசேன மற்றும் கமல் விஜேசிறி உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவுடன் , ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷவும் ஆஜராகியிருந்தார்.