பிரதமரின் தாமதம் காரணமாக திரும்பி சென்ற சீன தூதர்.
சீன அரசாங்கத்திடமிருந்து இலங்கைக்கு நன்கொடையாகப் பெறப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான பாடசாலைச் சீருடைத் துணிகள் சீனத் தூதுவரினால் , இலங்கைப் பிரதமர் ஹரினி அமரசூரியவிடம் நேற்று கொழும்பு துறைமுகத்தில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
முற்பகல் 11.30 மணிக்கு நடைபெறவிருந்த வைபவத்தில் பிரதமர் கலந்து கொள்ள ஒரு மணி நேர தாமதமாக வந்ததனால் ,சீனத் தூதுவர் வேறு பணி உள்ளது என சென்றுவிட்டு, திரும்பி வந்த பின்னரே உத்தியோகபூர்வமாக சீருடைகளை கையளிப்புச் செய்தார்.
ஒரு மணி நேர தாமதத்திற்கு பிறகு பிரதமர் வருகையை அடுத்தே விழா தொடங்கியது.
இந்த சீருடைகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பிரிவென மாணவ துறவிகள் மற்றும் சாதாரண மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது.