04. இந்திய தொடர்புகளும் , இயக்கங்களின் இந்திய அனுபவங்களும் : வெற்றிச் செல்வன்
1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகத் தெரிந்த இந்திய தொடர்புகளும் , இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்!
– வெற்றிச் செல்வன்
பகுதி 04
நான் சென்னையில் வந்து இறங்கியதும் தமிழ் மன்னன் பழைய எம்எல்ஏ ஹாஸ்டல் சென்றார். நான் நான் தங்கியிருந்த லாட்ஜு க்குப் போனேன். வாசலிலேயே என்ன பார்த்துவிட்ட லாட்ஜ் மனேஜர் கண்ணாலேயே திரும்பிப் போகும்படி சைகை காட்டினார்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை .வெளியில் வந்து பக்கத்தில் இருந்த டீக்கடையில் நின்றேன். டீ குடிப்பது போல் வெளியில் வந்த லாட்ஜ் மேனேஜர் என்னிடம் கடந்த மூன்று நாட்களாக தமிழ்நாட்டு உளவுத்துறை அதிகாரிகள் என்னைப்பற்றி விசாரித்ததாகவும் ஒரு அதிகாரி 24 .மணி நேரமும் என்னை பிடிப்பதற்காக லாட்ஜ்அலுவலகத்தில் வந்து அமர்ந்து இருப்பதாகவும் கூறி வரவேண்டாம் எனபோகச் சொன்னார்.
நான் உடனடியாக தமிழ் மன்னன் இடமும், பாவலர் அய்யா பெருஞ்சித்திரனார் தென்மொழி அச்சகஅலுவலகம் போய்ஐயாவிடம் மாறன் ,கந்தசாமி வந்தால் தகவல் சொல்லும்படியும், நான் பழைய எம்எல்ஏ ஹாஸ்டல் இருக்கும் இடத்தில் உள்ள ஆலமர இயற்கை விநாயகர் கோயில் பக்கத்தில் இருப்பதாகவும் கூறினேன்.
மாலையில் மாறன் தமிழ்மணி என்பவருடன் வந்தார். தமிழ் மணி எனக்கு தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து தருவார் தகவல்கள் முக்கிய செய்திகள் தமிழ்மணி மூலம் வரும் எனவும் கூறினார். (தமிழ் மணியை பற்றி கூற வேண்டும் இவர் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்தவர்.
சென்னை சட்டக் கல்லூரியில் அப்போது படித்துக் கொண்டிருந்தார் இளவழகன் ராமசாமி போன்றவர்களின் உறவினர் எமது ஈழ விடுதலைக்காக உதவி புரிந்தார்.
அவரைப் பற்றி ஒரு சம்பவம் ஒரு முக்கிய தகவலை கொடுப்பதற்காக புரசைவாக்கத்தில் அவர் தங்கியிருந்த விடுதியிலிருந்து எமது மறைமுக அலுவலகம் அமைந்திருந்த திருவல்லிக்கேணி கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர் தூரம் இருக்கும் கையில் பஸ்ஸுக்கு காசு இல்லாமல் நடந்தே வந்தார்.
வேர்க்க விருவிருக்க இப்போது தமிழ்மணி சென்னையில் வக்கீலாக இருக்கிறார்.)
என்னை கூட்டிக்கொண்டு போய் சென்னை மாநிலக் கல்லூரி இன்விக்டோரியாஆண்கள் விடுதி இல் தங்கிப் படித்துக் கொண்டிருந்த மன்னார்குடியை சேர்ந்த பாண்டி தென்னவன் என்றமாணவனிடம் என்னைஅறிமுகப்படுத்தினார்.
அக்காலகட்டங்களில் இலங்கை பிரச்சனை பெரிதாக இல்லை உமா பிரபா சுடப்பட்ட பிரச்சனை ஓரளவு விளங்கியவர்கள். தமிழ்மணி பாண்டி தென்னவன் இடம்விபரம் கூறி என்னை கவனமாக பார்த்துக் கொள்ள சொன்னார். அவரும் யாருக்கும் தெரியாமல் அவரது ஹாஸ்டல் ரூமில் என்னைத் தங்க வைத்துக் கொண்டு அவரது மிக நெருங்கிய நண்பர்களிடம் மட்டும் என்னை பற்றிய விபரங்களைக் கூற அவர்களும் என்னை கவனமாக பார்த்துக் கொண்டார்கள். மற்ற மாணவர்கள் கேட்டால் ஊரிலிருந்து தங்கள் உறவினர் பையன் வந்திருப்பதாகக் கூறினார்கள்.
எனக்கு உணவு வாங்கி வருவதிலிருந்து ஒரு படத்துக்கும் கூட்டிப் போனார்கள் டி ராஜேந்தர் நடித்த உயிருள்ளவரை உஷா படம்.(இன்று பாண்டி தென்னவன் தஞ்சாவூரில் வக்கீலாக இருப்பதாக அறிந்தேன் தொடர்பு இல்லை)
கிட்டத்தட்ட இருபது நாட்கள் அங்கு தலைமறைவாக இருந்தேன். பின்பு உமா மகேஸ்வரனும் , மாறனும் வந்து வேலைகளுக்காக நிர்வாக வசதிக்காக ஒரு தலைமறைவு அலுவலகம் போட ஒரு வீடுதேடச் சொன்னார்கள்.
அப்போது நாங்கள் எடுத்த தலைமறைவு வீடுதான் 28CNKரோடு திருவல்லிக்கேணி.தமிழ்நாடு போலீஸ்உளவுத்துறைக்கு கண்ணில் மண் தூவி விட்டோமென்று சந்தோஷத்தோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் இந்திய அலுவலகம் செயல்படத் தொடங்கியது.
நானும் மாதவன் அண்ணனும் சேர்ந்து நிர்வாக வேலைகளை செய்தோம். பாவலரேறு பெருஞ் சித்தனார் ஐயாவின் தென்மொழி அச்சகமும் ,ஐயாவின் வீடும் நமக்கு மிக அருகாமையில் இருந்ததால் எமது தோழர்களுடன் தகவல் தொடர்புக்கு எளிதாக இருந்தது.
83ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்உமாமகேஸ்வரன் எனது பெயரை வெற்றிச்செல்வன் மாற்றினார். அந்தப் பேரோடு எனது இயக்க வேலைகள் தொடர்ந்தன. எனக்கு சென்னையின் வடசென்னை தென் சென்னை போன்ற எல்லா இடங்களையும் சைக்கிளில் போய்வர அறிமுகம் செய்தவர் குரு பாவலரேறு ஐயாவின் மகனும் எனது நண்பருமான பொழிலன் தான். உமா மகேஸ்வரன் நாங்கள் அச்சிட்ட மக்கள் பாதை மலர்கிறது என்ற பத்திரிகையை சென்னை கடைகளுக்கு விற்பனை செய்துபோடுவதற்கு பொழிலன் இடம் உதவி கேட்டார்.
பொழிலன் தென்மொழி வெளியீடுகளான தமில்நிலம் தமிழ்ச்சிட்டு தென்மொழி பத்திரிகை களை கடைகளுக்கு போடபோகும் போது, நானும் ஒரு வாடகை சைக்கிளை எடுத்துக்கொண்டு எமது புத்தகங்களை சைக்கிளில் கட்டி காலை மணி எட்டு மணி போல் முதலில் வடசென்னை பக்கம் போவோம். நாங்கள் சைக்கிளை எடுத்து புறப்படும் போது பெருஞ்சித்தனார் அய்யா வாசலில் வந்து தனது மகனைபார்த்து, தம்பியை மிகக்கவனமாக கூட்டிக்கொண்டு போ, தனியே விட்டு விடாதே என்று கூறும்போதுஅவருக்கு எங்கள் மேல் இருந்த அன்பும் பாசமும் தான்.
இதில் சிறப்பு என்னவென்றால் என்னை விட வயதில் சிறியவர் பொழிலன். இருவரும் முதல்நாள் வடசென்னை கடைகள் அடுத்த நாள் தென் சென்னைகடைகள் என போய் வருவோம். காலையில் போனால் மாலை ஏழு மணியாகும் வர. கையில் காசு இருந்தாலும் செலவழித்து சாப்பிட உரிமை இல்லை அதே நேரம் மனமும் நமக்கு இல்லை. அம்பது காசு எலுமிச்சை சர்பத் மட்டும் குடிப்போம்.
இக்காலகட்டங்களில் எமது முதல் செங்கல்பட்டு முகாம் ரகசியமாக இயங்கத் தொடங்கியது சந்ததியார் ஜான் மாஸ்டர். வந்து போவார்கள். கண்ணன் என்ற சோ திஸ் வரணும் நிரஞ்சன் என்ற சிவனேஸ்வரன்ன்வெளியூரில் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனை ஜாமீன் ரத்து செய்யப்பட்டு இவர்களும் சென்னை வந்துவிட்டார்கள் நிரஞ்சன் என்னோடு தங்க வைக்கப்பட்டார். கந்தசாமியும், மாறனும் தான் மிக மிக மிக ஓய்வு இன்றி வெளியூர் உள்ளூர் என்று பயணப்பட்டு கொண்டு திரிவார்கள்.
சந்ததியார் ரகசியமாக என்னிடமும் மாதவன் அண்ணாவிடம் மாறனும், கந்தனும் என்ன செய்கிறார்கள் எங்கு போய் வருகிறார்கள் என கேட்பார். நாங்கள் எமக்கு தெரியாது என கூறுவோம். சந்ததியார் நாங்கள் பொய்கூறுவதாக நினைத்து எங்களிடம் கோபப்படுவார். உண்மையில் எங்களுக்கு தெரியாது
இளவழகன் ராமசாமி சாமி தவுடன் தமிழ்மணி எமது பத்திரிகை ஆசிரியர் மறைமலையான் போன்றவர்கள் அடிக்கடி வந்து போய் வருவார்கள் உமா. மகேஸ்வரனும் அடிக்கடி ரகசியமாக வந்து போவர். தமிழ்நாடு மேலவை துணைத் தலைவரும் கவிஞருமான புலவர் புலமைப்பித்தன் அடிக்கடி உமா மகேஸ்வரனை தனது வீட்டுக்கு கூப்பிடுவார்.
உமா என்னையும் கந்தசாமி யையும் சேர்த்துக் கூட்டி போவார். காரணம் காலை சாப்பாடாக இருந்தாள் என்ன பகல் சாப்பாடாக இருந்தால் என்ன, இரவு சாப்பாடாக இருந்தால் என்ன மீன் இறைச்சி கோழி என பல வகை உணவு வகைகளுடன் சாப்பாடு கட்டாயம் சாப்பிடணும் என்று கூறி வற்புறுத்தி சாப்பிட வைப்பார் இதற்கு பயந்து தான் உமா எங்களைக் கூட்டிக்கொண்டு போய் விட்டுவிடுவர். உமா தனக்கு வேலை இருப்பதாக கூறி போய்விடுவார்.
புலவர் புலமைப்பித்தன் கவலைப்பட்டாலும், புலவரும் குடும்பமும் மிக மிக அன்போடு உணவு பரிமாறுவார்கள். ஒருமுறை அவர் வீட்டு விசேஷத்துக்கு அழைத்து இருந்தார். மாறன் நான் உமா போயிருந்தோம். எப்போது சென்னைக்கு வழக்குதவணைக்காக வந்திருந்த பிரபாகரன் அவருடன் கூட பேபி சுப்ரமணியம் ராகவனும் என நினைக்கிறேன் அங்கு வந்தார்கள். அவர்கள் வந்து தங்குவதற்கு மொட்டை மாடியில் ஒரு அழகான குடிசை போட்டு வைத்திருந்தார். பிரபாகரன் குழுவினர் மொட்டை மாடிக்கு போய் விட்டார்கள்.
நாங்கள் அங்கு நிலைமை சரியில்லை என்று கூறிபுலவரிடம் சொல்லிக் கொண்டு எமது இடத்துக்கு திரும்புவதற்கு முயற்சி செய்தபோது புலவர் புலமைபித்தன் எங்களை விடவில்லைமிகவும் கவலைப்பட்டார், உமாமட்டும் தனக்கு வேலை இருப்பதாகச் சொல்லி போக அவருக்கு பாதுகாப்பாக மாறனும் போய், பின்பு கந்தசாமியை அழைத்துக்கொண்டு வந்தார். கந்தன் ஆயுதத்தோடு வந்து இருந்தார். அந்த அசைவ விருந்தை சாப்பிட முடியாமல் சாப்பிட்டோம். மாறன் கூறியபடி பிரபாகரன் ஆட்கள்போகும் வரை அங்கு இருந்தோம்.
நாங்கள் உரிமையோடு இருந்தது புலவருக்கும் மிக சந்தோசம். பின்பு தான் எனக்கு தெரிந்தது கந்தசாமி பிரபாகரன் போகும்போது ரோட்டில்வைத்து அவரை போடுவதற்கு முயற்சி செய்யப்போவதாக. எனக்கு ஆர்வமும் மிக பயமாக இருந்தது. ஆனால் என்ன காரணமோ மாறனும் கந்தசாமியும் அந்தத் திட்டத்தை கைவிட்டார்கள்.
நாங்கள் ரகசிய அறை அலுவலகம் என்று நினைத்திருந்த வீட்டுக்கு முன்னால் புதிதாக ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி அமர்ந்திருப்பார் அவருடன் நாங்களும் வேலைகளை கொடுப்போம். கிட்டத்தட்ட அந்த இடத்தை நாங்கள்மூன்று வருடங்கள் வைத்திருந்தோம்.
1988 ஆம் ஆண்டு நான் டெல்லிஅலுவலகத்தை மூடிவிட்டு சென்னை வந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழக இந்திய பிரதிநிதியாக பொறுப்பேற்ற போது மரியாதை நிமித்தம் தமிழ்நாடுஉளவுத்துறை ஐஜி சந்திக்கச் சென்றபோதுஅங்கு ஒருவர் வந்து என்னை சுகம் விசாரித்து விட்டு என்னை தெரிகிறதா என்று கேட்டார். நான் மறந்துவிட்டேன் தெரியவில்லை என்று கூறினேன்.
அப்போதுதான் அவர் கூறினார் நான் தான் உங்கள் திருவல்லிக்கேணி அலுவலகம் முன்பு செருப்பு தைக்கும் தொழிலாளி என்று. அப்போதுதான் தெரியும் அப்போதே எங்களைகண்காணிக்க தமிழ்நாடு உளவுத்துறை ஏற்பாடு செய்திருந்தது என்று. ஆனால் நாங்கள் அது ரகசிய இடம் என்று நினைத்திருந்தோம்.
உமாமகேஸ்வரன் மற்றும்மற்றவர்களின் வழக்குகளை அப்போது தோழர் கணபதி என்ற விக்கி என்ற விக்னேஷ் வரன்பார்த்து கொண்டார் அதைப் பற்றி பின்பு எழுதுகிறேன். உமது தமிழகத்தின் குரல் வானொலி இயங்க முழு மூச்சாக வேலை செய்த டெக்னிக்கல் வேலை முழுவதும் தோழர் பார்த்திபன் தான் பொறுப்பு ஜூலை கலவரத்துக்கு முன் நடந்த பல சுவாரசியமான விடயங்கள் அவருக்கு தெரியும்.
அவரும் தனது பங்களிப்பை பற்றியும் தனக்குத் தெரிந்த விடயங்களை எழுதினால் பல செய்திகள் எமக்கு அறியக்கூடியதாக இருக்கும்.இந்த பதிவை படித்தால் கட்டாயம் பழைய செய்திகளை எழுத வேண்டும் என வேண்டுகிறேன்.
தொடரும் …..