சத்தீஸ்கரில் பாஜக நிர்வாகி நக்ஸலைட்களால் கொலை!
சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டத்தில் பாஜக பிரமுகர் நக்ஸல் கும்பலால் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக பிரமுகரின் கொலை மட்டுமின்றி கடந்த ஏழு நாளில் மட்டும், பிஜப்பூர் மாவட்டத்தில் மொத்தம் ஐந்து பேரை நக்ஸலைட் கும்பல் கொன்றிருப்பதும், அந்த மாவட்டத்தில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் அதிக நக்ஸல் நடமாட்டம் கொண்ட மாநிலங்களில் ஒன்று சத்தீஸ்கர். இங்கு அவ்வப்போது பாதுகாப்பு படையினருக்கும் நக்ஸலுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடப்பதும், நக்ஸல்கள் பொதுமக்களை அச்சுறுத்துவதும் நடந்துவருகிறது.