கட்டுப்பாட்டு விலைக்கு மேல் அரிசி விற்பனை செய்த 50 கடைகளுக்கு எதிராக நுகர்வோர் அதிகாரசபை வழக்குத் தாக்கல் .
கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்பவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டு, அங்கு கண்டுபிடிக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும் என அதிகார சபையின் நுகர்வோர் விவகார மற்றும் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.
அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டாம் என அனைத்து வர்த்தகர்களுக்கும் அறிவித்துள்ள அவர், பண்டிகைக் காலங்களில் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சாதாரண வியாபாரத்தில் இவ்வாறான குற்றங்களுக்காக 100,000 ரூபா அபராதம் விதிக்கப்படலாம் எனவும், கட்டுப்பாட்டு விலையை காட்சிப்படுத்துவது கட்டாயம் எனவும் தெரிவித்தார். உற்பத்தித் திகதியை கட்டாயம் காட்சிப்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், மேற்கொள்ளப்படும் சோதனைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளுமாறும் அதிகாரசபையின் தலைவர் ஹேமந்த சமரக்கோன் அறிவுறுத்தியுள்ளார்.