காட்டுத் தீ காரணமாக இருபதாயிரம் பேரை வீடுகளில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை .
வடக்கு கலிபோர்னியாவின் மலிபுவில் பரவி வரும் காட்டுத் தீ காரணமாக இருபதாயிரம் பேரை அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்ற அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக காற்றின் நிலை காரணமாக தீ மிக வேகமாக பரவி வருவதாகவும், கிட்டத்தட்ட மூவாயிரம் ஏக்கர் நிலம் தீயில் சிக்கியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
விமானப்படையினரின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு பிரிவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதுடன், அதிக காற்று வீசி வருவதனால் தடை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பயிர்கள் மட்டுமின்றி வீடுகள், வாகனங்கள், கட்டிடங்கள் உள்ளிட்ட பல பொது உடைமைகளும் தீயில் சிக்கியுள்ளதாகவும், தீ பரவும் அபாயம் இருப்பதால் கலிபோர்னியா மாநில அதிகாரிகளும் சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.